எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் அணியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.