deepamnews
இந்தியா

பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டை நேற்று ஆரம்பித்து வைத்தார் இந்தியப் பிரதமர் மோடி

வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய கெளரவமான பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கும் வைபவம் நேற்று ஆரம்பமானது.

இந்நிகழ்வு 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தினத்தின் அங்கமாக மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் இடம்பெற்று வருகின்றது.

நேற்றைய  நிகழ்வை இந்தியப் பிரதமர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

சிறப்பு விருத்திர்களாக தென் அமெரிக்காவின் கயானா ஜனாதிபதி முகமது இர்பான் அலியும் சுரினாம் ஜனாதிபதி சந்திரிகா பர்சாத் சந்தோகியும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் வெவ்வேறு நாடுகளில் வாழும் 3,500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான குடியேற்றத்தின் முக்கியத்துவதை வலியுறுத்தும் வகையில் ஒரு நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

Related posts

தமிழகத்தில் கடும் வெப்பக் காலநிலை – வெப்பத்தை சமாளிக்க சுகாதாரத்துறை பொது மக்களுக்கு ஆலோசனை

videodeepam

அதானி குறித்து பேசும் போது மோடியின் கைகள் நடுங்குகின்றன – ராகுல் காந்தி தெரிவிப்பு

videodeepam

சகல கட்சிகளினதும் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அழைப்பு

videodeepam