கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளதாக கோழி இறைச்சி உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கோழி இறைச்சியை இறக்குமதி செய்து அரசாங்கத்தினால் ஏற்பட்ட விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ கருணாசாகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
குருநாகலில் ஊடக சந்திப்பொன்றை நேற்று ஏற்பாடு செய்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உற்பத்தி செலவுகளைக் குறைக்காமல் விவசாயிகளின் கழுத்தை நெரித்து விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எத்தனிப்பதாகவும் சஞ்சீவ கருணாசாகர சாடினார்.
முட்டை உற்பத்தியை அரசாங்கமே வீழ்ச்சியடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோழி இறைச்சி தன்னிறைவை இல்லாமற்செய்யும் நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் சங்கத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ கருணாசாகர குற்றஞ்சாட்டினார்.