deepamnews
இலங்கை

தாழமுக்கம் காரணமாக காங்கேசன்துறையில் இருந்து மட்டக்களப்பு வரை எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால், காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவோர், உடனடியாக கரைக்கு திரும்புமாறு நேற்று (20) வளிமண்டல திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.

தென்மேற்கு வங்ககடலில் வலுவடைந்து வரும் காற்றழுக்க தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் உள்ளது.

இதனால், காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடல் பரப்புக்களில் காற்றின் வேகம் 50 தொடக்கம் 55 கிலோ மீற்றர் வரை  இருப்பதுடன், அலையும் இரண்டு தொடக்கம் மூன்று  மீற்றர் வரையில் காணப்படும்.

எனவே, மீனவர்களும் கடலில் பயணம் செய்வோரும் கடலில்  நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related posts

மதுபான சாலை அமைப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு.

videodeepam

வரிக் கொள்கை, தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு – தொழிற்சங்க போராட்டத்தால் இன்று நாடு முடங்கும் அபாயம்

videodeepam

கோதுமை மா இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

videodeepam