deepamnews
இலங்கை

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டவர்களுக்கு வணக்கம் செலுத்த அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் கார்த்திகை 27 சுடர் ஏற்றிவணக்கம் செலுத்த வருமாறு முள்ளிவாய்க்கால் பிரதேச மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் நேற்று முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நினைவிற்கொள்ளப்படவுள்ளது அதற்கான தயார்படுத்தலில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்

 முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் முள்ளிவாய்க்கால் கிராம மக்களால் சிரமதான முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை நினைவில் கொள்ள தயாராக உள்ளனர்.

இதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் உற்றோர்கள் அனைவரும் வருகை தந்து சுடரேற்றி மாவீரரை நினைவில் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

திடீரென ஏற்பட்ட காற்றுடன்கூடிய மழைகாரணமாக இரண்டு வர்த்தக நிலையங்களில் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது.

videodeepam

இலங்கையின் நிலைமை மேலும் மோசமடையும் – உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை

videodeepam

ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளம் கிடைக்கப்பெறும் – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

videodeepam