deepamnews
இலங்கை

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் – நல்லூரில்   இன்றுமுதல் அஞ்சலி நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதுடன் அவை நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ் மாநகர சபையின் அனுமதிகளை  பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும் எனவும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமென யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கோரிக்கை விடுத்தார்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று விசேட சர்வகட்சி கூட்டம்

videodeepam

அரசாங்கத்தை போராட்டங்களினால் வீழ்த்த முடியாது என்கிறார் எஸ்.எம்.சந்திரசேன

videodeepam

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

videodeepam