deepamnews
இந்தியா

‘வாய்மையே வெல்லும்’ – குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான ராகுல் காந்தி பெருமிதம்

‘வாய்மையே வெல்லும். எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன்’ என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தனது இரண்டு வருட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து தண்டனையை இடைநிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி  நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த உத்தரவுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஏ.எம்.சிங்வி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதன்போது பேசிய ராகுல் காந்தி, இன்று இல்லை என்றாலும், நாளை இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் வாய்மை வென்றே தீரும். எனது இலக்கு எனக்குத் தெரியும். நான் என்ன செய்யவேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் உறுதுணையாக நின்ற, எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. பொதுமக்கள் காட்டும் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் மோடி ஒரே ஆடையை மீண்டும் அணிந்து பார்த்ததுண்டா? – ராகுல் காந்தி கேள்வி.

videodeepam

உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் – இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

videodeepam

இந்திய சுதந்திர தினத்தை தேசிய கொண்டாட்டமாக அமெரிக்கா அறிவிப்பு.

videodeepam