deepamnews
இலங்கை

போதைப்பொருள் – பாதாள உலகக் குழுவை ஒழிக்க விசேட குழு!

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒழிப்பதற்காக காவல்துறைமா அதிபரின் முழுமையான மேற்பார்வையின் கீழ் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் ஆலோசனைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான விடயங்களை காவல்துறை தலைமையகம் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சுக்கு அறிவிப்பதற்கான கடப்பாடு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிளிநொச்சியில் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும் ,

videodeepam

ஜக்கியதேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க அவர்கள் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம்.

videodeepam

கல்மடு விவசாயிகளிற்கு இரணைமடு குளத்தின் கீழ் 500 ஏக்கர் நெற்செய்கைக்கு அனுமதி.

videodeepam