deepamnews
இலங்கை

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கிய ஜப்பானிய தூதுவர்.

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கமநல  சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸூகோஷி ஹிடோகி,

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயம் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிடப் பிரதிநிதி விஜேந்திர சரண், யாழ்ப்மாண மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் பிரணவன் தெய்வநாயகி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதன் போது சாவகச்சேரி கமல சேவைகள் திணைக்களத்துக்குட்பட் 2777 சிறிய விவசாயிகளுக்கு 25 kg நிறை கொண்ட 3774 யூரியா உரப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வழங்கவென 25 கிலோ கிராம் கொண்ட 19973 யூரியா பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனர்த்தத்துக்கு உள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட  300 இலங்கையர்களும் வியட்நாமில்

videodeepam

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் – பல  பிரதேசங்களில் கடும் மழை

videodeepam

162,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்.

videodeepam