deepamnews
இலங்கை

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் – பல  பிரதேசங்களில் கடும் மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் பெரும்பாலும் இன்று ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம்  காணப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இலங்கையின் வடக்குக் கரையை அண்மிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைநிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

சுழிபுரம் – பாண்டவட்டையில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு!

videodeepam

IMF வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு ; இலங்கை – அமெரிக்கா பேச்சு

videodeepam

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை எந்த தேர்தலும் இடம்பெறமாட்டாது – தேசிய நாளிதழ் செய்தி வெளியீடு

videodeepam