deepamnews
இலங்கை

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்து – பசுபிக் பிராந்தியம் தொடர்பான ஆசியான் அமைப்பின் தொலைநோக்கு பார்வைக்கு தான் உடன்படுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் இடம்பெற்ற 56ஆவது ஆசியான் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

1967 ஆகஸ்ட் 8ஆம் திகதி ஆசியான் என்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கையொப்பத்துடன் தாய்லாந்தின் பெங்கொக்கிலுள்ள வெளியுறவு அமைச்சுக் கட்டடத்தில் உருவாக்கப்பட்டது.

புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.

ஆசியான் உறுப்பு நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8ஆம் திகதி ஆசியான் தினத்தை கொண்டாடுகின்றன.

ஆசியான் அமைப்பில் நுழைவதற்கான முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதாகவும், அதன் அங்கத்துவம் கிடைக்காததால், அதற்கு மாற்றீடாக, பிராந்திய பரந்த பொருளாதாரக் கூட்டிணைவில் இணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு

videodeepam

ஆளுநர்களை சந்தித்த பிரதமர் தினேஷ் குணவர்தன – உள்ளூர் ஆட்சி மன்றங்கள் தொடர்பில் ஆராய்வு

videodeepam

யாழில் உள்ள மேலும் ஒரு ஆலயத்தின் விக்கிரகங்களையும் காணவில்லை..?

videodeepam