deepamnews
இந்தியா

இந்தியா – சீன இராணுவ தளபதிகளுக்கிடையில்  19 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை!

இந்தியா மற்றும் சீன இராணுவ தளபதிகளுக்கிடையில் 19 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை  இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் இந்திய குழுவுக்கு கெமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி தலைமை தாங்குகிறார்.

அத்துடன், வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் மற்றும் இந்தோ தீபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளும், சீனா தரப்பில் தெற்கு சின்ஜியாங் இராணுவ அதிகாரிகள் தலைமையிலான குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 4 தடவைகள் படை குறைப்பிற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தற்போதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் எல்லை கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளனர்.

எனவே 19 ஆவது சுற்று பேச்சுவார்த்தையின் போது கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகளை குறைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Related posts

கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும் – குடியரசு தின கருத்தரங்கில் கனிமொழி வலியுறுத்தல்

videodeepam

இந்தியா – சீனா இடையே பதற்றம் – நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம்.

videodeepam

இது இந்திய நாடா? ஹிந்தியின் நாடா?’ என சீமான் கேள்வி

videodeepam