deepamnews
இலங்கை

மின்சாரம், கனியவளம், வைத்தியசாலைகள் அத்தியாவசிய சேவைகள் என அறிவிப்பு!

மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சார விநியோகம் தொடர்புடைய சகல சேவைகளும், கனியவள உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல், விநியோகம் அத்தியாவசிய சேவைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகள், மருந்தகங்கள், நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளித்தல் என்பன அத்தியாவசிய சேவைகள் என அறிவித்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதிநிதி இலங்கைக்கு வருகிறார்

videodeepam

2023 ஆம் ஆண்டு புதிய வருட பிறப்பு இன்று – மக்கள் வான வேடிக்கைகளுடன் வரவேற்பு

videodeepam

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளாது என அறிவிப்பு

videodeepam