deepamnews
இலங்கை

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்தது  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அர்த்தபூர்வமானவையாக அமைய வேண்டுமாயின், நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்ப்பில் ஜனாதிபதிக்கு  கையளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களம் , வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களத்தின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக குறித்த ஆவணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

வனவளப் பாதுகாப்பு ,வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் சிலவும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு மாறாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முன்னெடுக்கப்படுக்கின்ற எவ்வகையான முயற்சிகளும் வெற்றியளிக்காது எனவும் தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்த உதவாது எனவும் குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜக்கியதேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க அவர்கள் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம்.

videodeepam

ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்ற நால்வர் மீண்டும் பொதுஜன பெரமுனாவுக்கு சென்றனர்

videodeepam

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தோற்கடிக்கப்படும் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

videodeepam