deepamnews
இலங்கை

இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா அனுமதி – தமிழக  அமைச்சர் தகவல்

இலங்கைக்கு பயணிகள் கப்பல்சேவையை ஆரம்பிப்பதற்கு இந்திய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என  தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள கெவாடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணிகள் கப்பல்சேவையை ஆரம்பிப்பதற்கு  நாகை துறைமுகம் தயாராகி வருகிறது என அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம்  28.07.2023வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்பட்டது.

videodeepam

இறக்குமதி செய்யப்படும் பழங்களில் ஈயம் – பொதுமக்களுக்கு பாதிப்பு

videodeepam

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

videodeepam