deepamnews
இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர் கந்தனின் வருடாந்த  மஹோற்சவம் கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருந்த  அலங்கார கந்தனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றன.

 தொடர்ந்து  காலை 10.00 மணியளவில் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியர்களின் வேதபாராயண ஓத ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வைகுந்தன் தலைமையிலான சிவாச்சாரியர்களால்  கொடியேற்றிவைக்கப்பட்டது.

21.08.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 25 நாட்கள்திருவிழா இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

30.08.2023 அன்று 10ஆவது திருவிழாவாக திருமஞ்சத் திருவிழாவும், 04.09.2023 அன்று 12 ஆவது திருவிழாவாக அருணகிரிநாதர் திருவிழாவும், 05.09.2023 அன்று 13 ஆவது திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழாவும், 06.09.2023 அன்று 14 ஆவது திருவிழாவாக சூரியோதய திருவிழாவும், 09.09.203 அன்று சந்தான கோபாலர் திருவிழாவாக, மாலை திருக்கைலாச திருவிழாவும்,10.09.2023 வேல்விமானத் திருவிழாவும், 11.09.2023 அன்று தண்டயுதபாணி உற்சவ திருவிழாவும், 12.09.2023 அன்று ஒருமுகத் திருவிழாவும், மாலை சப்பறத் திருவிழாவும், 13.09.2023 அன்று இரதோற்சவமும், 14.09 அன்று தீர்த்ததோற்சவமும் நடைபெற்று, மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழா நிறைவடையும்.

இன்றைய கொடியேற்ற உற்சவத்தில் பல பாகங்களில் இருந்து வருகை தந்தபக்தர்கள் பலரும் இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

Related posts

கொழும்பில் அதிரிகரித்து வரும் சிறுநீரகக் கடத்தல்

videodeepam

சூட்சுமமான முறையில் வீட்டுத் தொட்டியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

videodeepam

எரிபொருளின் தரம் குறித்து முறைப்பாடுகள் – ஆய்வு செய்ய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு

videodeepam