deepamnews
இலங்கை

கடவுள் நம்பிக்கையினை பாதுகாப்பதற்கு நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்ற சூழ்நிலைக்கு வந்துள்ளோம – மாவை சேனாதிராசா!

இனவிடுதலைக்கான போராட்ட ஆரம்பத்தில் இருந்து கடவுள் நம்பிக்கையினை போராடவேண்டிய நிலையிக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிரசா தெரிவித்துள்ளார்.

23.08.2023  அன்று முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் புலம்பெயர் தமிழ் அமைப்பான வி.பி.பவுண்டேசன் அமைப்பின் ஏற்பட்டில் 85 மாணவர்களுக்கான வங்கிக்கணக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் இனம் இந்த நாட்டில் மொழியுரிமை அற்றவர்களாக மொழிக்கு சமத்துவும் இல்லாதவர்களாக சிங்கள ஆட்சிமொழியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது தமிழுக்கு அந்த உரித்தில்லாத பொழுது சமத்துவத்திற்காக போராட்டங்கள் ஆரம்பித்தன அதன் பின்னர்  எங்கள் நிலம் சிங்கள குடியேற்றங்களினால் நிரப்பட்டபொழுது எங்கள் நிலம் தமிழ் நிலம் என்ற அந்தஸ்தினை இழந்த பொழுது அந்த நிலத்தில் நாங்கள் ஆழவேண்டும் என்ற போராட்டங்களுக்குமத்தியில் அந்த நிலங்கள் பறிக்கப்பட்ட பொழுது அது சிங்கள மயமாக்கப்பட்ட பொழுது இராணுவ மயமாக்கப்பட்ட பொழுது இந்த மண்ணில் எங்கள் போராட்டங்கள் ஆரம்பித்தது.

இன்று எங்கள் மொழி எங்கள் தேசம் அடக்கப்பட்டு எங்கள் இனம் அழிக்கப்படுகின்ற நிலை இப்பொழுது எங்கள் மதம் மதரீதியாக எண்ணிக்கையில் குறைந்தவர்கள் இன்று பௌத்தத்தின் அடக்குமுறையாகி எங்களின் மத நம்பிக்கைகள் அழிக்கப்படுகின்ற நிலையில் ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.

எங்கள் இன விடுதலை என்பது எங்கள் தேசத்தில் நாங்கள் ஆழவேண்டும் என்று போராட்டத்தினை ஆரம்பித்த தந்தை செல்வநாயகத்தின் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது எங்கள் மதத்தினை கடவுள் நம்பிக்கையினை பாதுகாப்பதற்கு நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றசூழ்நிலைக்கு வந்துள்ளோம்.

எங்கள் மண்ணில் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன எங்கள் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது எங்கள் நிலங்களை எங்களால் பாதுகாக்கமுடியவில்லை. இந்த நிலையில் 12 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் இருந்து எங்கள் இனம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக தங்கள் உழைப்பினையும் அர்ப்பணிப்பினையும் ஈட்டிவருகின்றார்கள்.

இங்குள்ள சிறுவர்கள் சுதந்திரம்பெற்றவர்களாக வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் வெளிநாடு சென்றாலும் அவர்கள் எண்ணங்கள் இந்த மக்களிடத்திலும் இந்த மண்ணிலும் இருக்கின்றது.

எங்கள் எதிர்கால சந்ததிக்காக அவர்கள் தங்களை அர்பணித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கும் சந்தர்பமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியா பயணம்

videodeepam

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு சுதந்திர கட்சி எதிர்ப்பு!

videodeepam

 IMF இன்  நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை விவாதம் இம்மாத இறுதியில்

videodeepam