deepamnews
மருத்துவம்

அளவுக்கு மீறி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் விபரீதம்,

தினமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு 100 கிராம் பேரீச்சம்பழம் வரை எடுத்துகொள்ளலாம்.

அதனால் ஒவ்வொரு நாளும் உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கேற்ப எத்தனை பேரீச்சம்பழம் வரை சாப்பிடலாம் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் . அமிர்தமே என்றாலும் அதை அளவுக்கு மீறி எடுத்துகொண்டால் அது உடலுக்கு தீங்கையே விளைவிக்க கூடும். அந்த வகையில் பேரீச்சம்பழம் உண்டாக்கும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

பேரீச்சம்பழம் அதிக அளவு எடுத்துகொள்ளும் போது ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை உண்டாக்க வாய்ப்புண்டு என்பதால் இது குறித்து ஏற்கனவே அவதிப்படுபவரக்ள் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

பேரீச்சை நார்ச்சத்து அதிகம் உள்ளவை. இது கலோரிகளாலும் நிரம்பப்பட்டுள்ளது. இதனால் இது எடை அதிகரிப்புக்கு பங்களிக்க வாய்ப்புண்டு. ஒரு கிராம் பேரிச்சையில் 2. 8 கலோரிகள் கொண்டுள்ளது. இவை எடை அதிகரிப்பை ஊக்குவிக்க செய்யும். அதிகமாக பேரீச்சை சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.

பேரீச்சம்பழம் உலர்ந்தவற்றில் சரும வெடிப்புகளை உண்டாக்க கூடிய சல்பைட் இருக்கலாம். இதனால் இவை சருமத்தில் தடிப்புகளை உண்டாக்கவாய்ப்புண்டு.

பேரீச்சம்பழம் நன்மை செய்யக்கூடியவை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது அது இந்த விளைவுகளை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு என்பதால் உங்கள் உடல் ஆரோக்கியம் ஏற்ப ஊட்டசத்து நிபுணரோடு பேரீச்சை எடுத்துகொள்வது ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும்.

Related posts

​பால் மற்றும் பால் பொருள்கள் முகப்பரு சருமத்துக்கு நல்லதா?​

videodeepam

நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

videodeepam

மன அழுத்தம் முடியின் நிறத்தை மாற்றுமா?​ வாங்க பார்க்கலாம் ..

videodeepam