இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறவுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் நாளை (28) இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.
அரசியல், வர்த்தகம், முதலீடு, மூல விதிகள், வர்த்தக வசதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் தாய்லாந்தின் வெளியுறவுத்துறை நிரந்தர செயலாளர் பங்கேற்கவுள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் முன்னேற்றத்தை அடையவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.