deepamnews
இலங்கை

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்ய ஐ.எம்.எப். பிரதிநிதிகள் வரவுள்ளனர்.

இலங்கைக்கு வழங்கியுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதியின் இரண்டாவது தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 14 ஆம் திகதி நாட்டிற்கு வருகைதரவுள்ளது.

இந்த பிரதிநிதிகள் குழுவினர் செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற 2.9 பில்லியன் டொலர்  நீடித்த கடன் வசதி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, பல இலக்குகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஜூலை மாத இறுதியளவில் இந்த இலக்குகளில் 35 வீதமானவற்றை மாத்திரமே இலங்கை நிறைவேற்றியிருந்ததாக Verite Research நிறுவனம் அண்மையில் வௌியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதில் மேலும் 43 வீதமான இலக்குகளை நிறைவேற்றுவதற்கான நவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

இதன் கீழ், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கான திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட ஊழியர் ஓய்வு நிதியங்களின் திறைசேரி முறிகள் ஊடாக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடனை மறுசீரமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன்,  அந்த முறிகளை மீண்டும் புதிய முறிகளாக விநியோகிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய முறிகளுக்காக 2025 ஆம் ஆண்டு வரை 12 வீத வட்டியும் அதன் பின்னர் 9 வீத வட்டியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான் சொல்வதே இங்கு நடக்கும்…! பிக்குவின் கதை அல்ல- அமைச்சர் டக்ளஸ் சீற்றம்.

videodeepam

கொழும்பில் பரபரப்பு  : உணவக உரிமையாளர் கொலை

videodeepam

சென்னை – இலங்கை இடையேயான முதல் பயணக் கப்பல் கொடியசைத்து தொடங்கி வைப்பு

videodeepam