deepamnews
இலங்கை

இராணுவத்தினரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு  மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட  பகுதிகளில் உள்ள  11 பாடசாலைகளை  கொண்ட 200 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் (31) வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு கிளிநொச்சி  கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள  அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான கட்டளை தளபதி  சுஜிவ கேட்டியாரச்சி, உயர் இராணுவ அதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், கண்டவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றேர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றேர்களுக்கு தென்னை மற்றும் பழமரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Related posts

இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல்

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை – சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு

videodeepam

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம்.

videodeepam