கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆணை விழுந்தான் பகுதியில் உள்ள சிலமக்கள் இன்றைய தினம்01.09.2023 கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில் தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினைஇராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும் தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாயினும் இராணுவத்தினரின் உதவியே முதல் கிடைக்கப்பெறுவதாகவும் தமது பகுதியளில் நடைபெறும் மணரநிகழ்வுகளில் கூட இராணுவத்தின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளதாகவும்.

அத்துடன் தமது பகுதிகளில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதன்காரணமா இதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக அக்கறையான் போலீசாருக்கு பலமுறை தெரிவித்தாலும் அவர்கள் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை எனவே இப்பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தி கவனயீர்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.