deepamnews
இலங்கை

எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது – வஜிர அபேவர்தன

தேசத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இது தேர்தலை நடத்துவதற்கான நேரம் அல்ல என்றும் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பவர்கள் நாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

தேசத்தை சீர்குலைக்க நினைக்கும் இந்த சக்திகளின் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்படும் என்பதோடு, அவர்கள் விரைவில் மூலையில் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

‘உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 8000 என்ற நிலையில் இருந்து 4000 ஆகக் குறைப்பதும், ஆட்சியின் அனைத்து அடுக்குகளிலும் உள்ள விருப்பு வாக்கு முறைமையை ஒழிப்பதும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவேகமுள்ள எவரும் இதை எதிர்ப்பார்கள் என தான் எண்ணுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

பிடுங்கி வீசப்பட்ட ஆதி சிவனை உரிய இடத்தில் அரசு நிறுவ வேண்டும் – மறவன்புலவு கோரிக்கை

videodeepam

உள்ளூராட்சி தேர்தல் இரத்துச் செய்யப்படவில்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

videodeepam

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் புதிய தகவல்

videodeepam