deepamnews
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகைதந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நீதிமன்றில் முன்னிலையனார்.

நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படது.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான தனிப்பட்ட முறைப்பாடு வழக்கை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related posts

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு-கஞ்சன விஜேசேகர

videodeepam

மனைவியை கொலை செய்து குழி தோண்டி புதைத்த கணவன் – முல்லைத்தீவில் பரபரப்பு.

videodeepam

சீனா, இலங்கையின் நட்பு நாடில்லை என நாடாளுமன்றில் சாணக்கியன் தெரிவிப்பு

videodeepam