deepamnews
இலங்கை

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதே எனது முடிவு – சித்தார்த்தன் எம்.பி.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது எதிர்வரும் ஆறு, ஏழு, எட்டாம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு, எட்டாம் திகதி வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது.

இந்த வாக்களிப்பில் நாங்கள் என்ன செய்வது என்பது தொடர்பாக இதுவரை கலந்துரையாட வில்லை. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட விதத்தில் என்னை கேட்டால், சுகாதாரத்துறை மிகவும் பின்னடைவு ஒன்றை சந்தித்திருக்கின்றது சுகாதாரத் துறை. பல குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருக்கின்றது. இப்போது கூட மருந்துகள் வாங்குகின்ற விடயங்களிலே மற்றும் உபகரணங்கள் வாங்குகின்ற விடயங்களிலே மிகப்பெரிய ஊழல்கள் நடந்து கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.

ஆகவே இது சம்பந்தமாக நாங்கள் கட்டாயமாக கவனம் செலுத்தி, மிக தெளிவான ஒரு முடிவெடுத்து இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தான் வேண்டும் என்பது என்னுடைய சொந்த கருத்து. இருந்தாலும் மற்ற கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து பேசி ஒரு முடிவை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

காளான் கறி சாப்பிட்ட மூவர் உயிரிழப்பு !அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைது.

videodeepam

எரிபொருள் கொள்வனவுக்காக ரஷ்யாவிடம் பேச்சு நடத்தும் இலங்கை

videodeepam

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

videodeepam