deepamnews
இலங்கை

கரும்பு வெட்ட சென்றவேளை காதல் 16 வயதில் குழந்தை -கணவன் கைது!

தன்னுடைய மனைவி, குழந்தையை பிரசவித்ததை அடுத்து, அக்குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவ​மொன்று மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.

மொனராகலை, கலபெத்த, அம்பலாந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவர் மொனராகலை பொது வைத்தியசாலையில் கடந்த (31) ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சிறுமி மொனராகலை அலியாவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரம் வரை கல்வி கற்று பின்னர் தனது தாயுடன் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.

இவர் அம்பலாந்த பிரதேசத்தில் கரும்பு வெட்டச் சென்ற போது, ​​அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பெரியவர்களின் சம்மதத்தின் பேரில், மொனராகலை பிரதேசத்தில் உள்ள திருமணப் பதிவாளர் ஒருவரால், சிறுமிக்கு 19 வயது எனக் கூறி சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

பின்னர் இருவரும் அம்பலாந்த பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி மொனராகலை பொது வைத்தியசாலையில் குழந்தை பிறந்துள்ளது.

திருமணமானபோது அவளுக்கு 14 வயது 07 நாட்கள் என அறியமுடிகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய கணவரை கைது செய்து விசாரணைகளை மொனராகலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

Related posts

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் விகாரைகள் அமைப்பதற்கு நான் என்றும் எதிர்ப்பு – அங்கஜன் இராமநாதன்

videodeepam

இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்.

videodeepam

வாக்குச்சீட்டு அச்சுப் பணிகளுக்கான நிதி தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம்

videodeepam