இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதர் அவர்கள் இன்றைய தினம்11.09.2023 கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.
இதன் போது அவர் தெரிவிக்கையில் தற்பொழுது சணல் போ தொலைக்காட்சி ஆவணப்படமாக வெளியிட்டு வரும் நிலையின் கடந்த காலங்களில் கத்தோலிக்க மக்களை கொலை செய்து எப்படி? கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆனார் என்பதனை வெளிப்படுத்தும் பெரும் ஆவணமாக தற்பொழுது சனல் போ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் இலங்கைத் தமிழரச கட்சி மற்றும் கருத்தினால் ஆண்டகை, சஜித்பிரேமதாச, சிவனேசன் சந்திரகுமார், சரத்பொன்சேக்கா போன்ற அனைவரும் வலியுருத்திவது என்னவென்றால் சர்வதேச பொறிமுறைகளுக்கு அமைவாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தப்பட வேண்டும் அதன் ஊடாக உண்மைத் தன்மையை கண்டறியப்பட வேண்டும் என்பதே ஆகும் .
போரக்குற்றம் நடைபெறவில்லை என்று அன்று கர்த்தினால் ஆணடகை தெரிவித்தார் தற்பொழுது போர்குற்றம் நடைபெற்றது என்கிறார் தற்பொழுது சர்வதேசவிசாரனை தேவைஎன்கின்றனர் இதில் தற்பொழுது நடைபெறுகின்ற சம்பவம் என்னவென்றால் கோழி பிடித்த கள்ளனும் கூட இருந்தே தேடுகின்றான் என்பது போல அமைகிறது.
அவர் மேலும் தெரிவிக்கையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தான் வெல்வதற்காகவே தற்பொழுது சணல் போ என்ற குண்டை வெடிக்க வைத்துள்ளார் எது எப்படி இருந்தாலும் தமிழர்களுக்கு இவ்வகையிலும் நீதி கிடைக்கப் போவதில்லை எனவும் யுத்தம் முடிவடைந்ததும் எப்படி பரம விதாரன குழு அமைக்கப்பட்டது எல்எல்ஆர் குழு அமைக்கப்பட்டது ஏன் பின்னர் ஜனாதிபதி ஆணை குழு அமைக்கப்பட்டது இப்படியே தொடர்ச்சியாக குழுக்களை அமைத்து அமைத்து வருகின்றார்கள் தவிர எந்த வித தீர்வும்கிடைக்கபோவதில்லை எனவும் தெரிவித்தார்.