deepamnews
இலங்கை

பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஐ.நா விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக  தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையின் 54 அமர்வின் ஆரம்பத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை சந்தேகத்திற்குரிய ஆணை எனவும்  இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி வர்ணித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழிவகுத்த  46./1 , 51./1 தீர்மானங்களையும் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது என்பதை  நான் ஆரம்பத்திலேயே தெரிவிக்க விரும்புகின்றேன். எழுத்துமூல அறிக்கைகளையும் முடிவுகளையும் பரிந்துரைகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம்.

இந்த தீர்மானங்களின் காணப்படும் உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ளாததால் பல நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன அல்லது அதில்வாக்களிப்பதை தவிர்த்தன என்பதை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். குறிப்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை  அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளமை முன்னொருபோதும் இடம்பெறாத விடயம்.

இது மனித உரிமைபேரவையின் உறுப்பு நாடுகள் பேரவைக்கு வழங்கிய ஆணைக்கு அப்பால் செல்கின்றது என்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது. இந்த தீர்மானங்கள் உள்விவகாரங்களில் தலையிடுபவை சமூகங்களை துருவமயப்படுத்துபவை.

இந்த தீர்மானங்களை மனித உரிமைகளிற்கு அப்பாற்பட்ட காரணங்களிற்காகவும் தங்களின் உள்நாட்டு அரசியலுக்காகவும்  ஒருசில நாடுகள் பின்பற்றுகின்றன. இந்த தீர்மானத்தின் நிதிசார்ந்த தாக்கங்கள் குறித்து பல நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. இது பேரவையினதும் உறுப்பு நாடுகளினதும் வளங்கள் மீது பயனற்ற விதத்தில் செலவுகளை உருவாக்ககூடியது என்பதை இலங்கை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிவந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை இதற்கு ஒத்துழைப்பு வழங்காது.எனினும் பல்தரப்பு கட்டமைப்பில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்கின்ற நாடு என்ற அடிப்படையிலும் சர்வதேச சமூகத்துடனான எங்களின் ஆழமான ஈடுபாட்டை கருத்தில்கொண்டும்  இலங்கை பேரவையின் ஏனைய பொறிமுறைகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை தொடர்ந்தும் பேணும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து சந்தேகம் – இந்திய ஊடகம் தகவல்

videodeepam

ரணில் தேசிய சொத்தானது நாடு செய்த அதிஷ்டம் – வஜிர அபேவர்த்தன

videodeepam

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர்

videodeepam