deepamnews
இலங்கை

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மலேசிய பிரதமருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மலேசிய பிரதமர் அன்வர் பின் இப்ராஹிமிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு   நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது இரு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என தெரிவித்த பிரதமர் அன்வர் இப்ராஹிம், மலேசியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாதிடுவதற்கான இலங்கையின் கோரிக்கைக்கும் சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.

அத்துடன், வலயத்தின் விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் அங்கத்துவம் பெறுவதற்கான இலங்கையின் கோரிக்கைக்கு ஆதரவளிகின்றோம் என  மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள ஐ.ஓ.ஆர்.ஏ.மாநாட்டில் மலேசிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பார் எனவும் பிரதமர் அன்வர் பின் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

மலேசியாவிற்கு விஜயம் செய்யுமாறு மலேசிய அரசரின் அழைப்பை மலேசிய பிரதமர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததுள்ளார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடுத்த வருடம் மலேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளேன் என்று அறிவித்துள்ளார்.

Related posts

இந்திய பிரதமரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை – இரா.சம்பந்தன் எழுதிய கடிதம்.

videodeepam

நாணய நிதியத்தின்  முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி ரணில் முக்கிய கலந்துரையாடல்

videodeepam

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் பூட்டு

videodeepam