deepamnews
இலங்கை

வட்டிக்கு பணம் வழங்கும் நாடுகளில் சீனா முன்னிலை அவைத் தலைவர் சிவஞானம் தெரிவிப்பு!

வட மாகாண சபை அவைத தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடாக அமையத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

உலகில் சீனா குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடாக திகழ்கின்ற நிலையில் தனது அடி மடியில் கை வைக்காத நிலையில் சீனா நடந்து கொள்கிறது.

 நாங்கள் அறிந்த வரையில் முன்னர் ஆப்கான்காரர்களே குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு கொடுப்பவர்களாக அறிந்திருக்கிறோம்.

ஆனால் இந்நிலை மாறி சீனா தற்போது உலகில் குறைந்த பணத்தை கூடிய வட்டிக்கு கொடுக்கும் நாடாக மாறி வருகிறது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் சீனாவே அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில் தான் வழங்கிய கடனை எந்த வழியிலும் சீனா மீளப்பெறுவது நிச்சயம்.

சர்வதேச நாணய நிதியம் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கூறி வரும் நிலையில் இதுவரை அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை.

நாங்கள் ஒன்றை கூறுகிறோம், இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனை காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் ஐ.எம்.எஸ் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஆகவே சீனாவிடம் இலங்கை பெற்ற கடனை எந்த வழியிலும்  சீனா மீளப் பெறுமே தவிர கொடுத்த கடனுக்காக தனது அடிமடியில் கை வைக்க விடாது என்றார்.

Related posts

மட்டக்களப்பு வாவியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு – உயிரிழந்தவர் அடையாளம்  

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

videodeepam

2023 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

videodeepam