deepamnews
இலங்கை

2023 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்,  இதன் மீதான வாக்கெடுப்பை நவம்பர் 22 ஆம் திகதி மாலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 08 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நவம்பர் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 08 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர கிழமையின் ஏனைய நாட்களில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

Related posts

சித்தங்கேணி சிறிகணேசா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

videodeepam

இலங்கையர்கள் உள்ளிட்ட 27 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது

videodeepam

எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்ட ஈடு: அறிக்கை தயாரிக்கப்படவில்லை என்கிறது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை.

videodeepam