deepamnews
இலங்கைசர்வதேசம்

மன்னிப்புக் கோரினார்  கனடா பிரதமர் ட்ரூடோ.

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்த ஒருவரை நாடாளுமன்றில் வைத்து கௌரவித்தமை தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் கடந்த 22 வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் 2 ஆம்  உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர் எனவும் தகவல் பரவியது.

அதனை தொடர்ந்து அவரை கௌரவித்தமை தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த விவகாரம் கனடா நாடாளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது, இந்த நிகழ்வுக்கு வருந்துகிறேன்.

அப்போதைய சூழலை அறியாமல் யூத மக்களின் நினைவுகளை மீறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

மாகாண சபை தேர்தலையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

videodeepam

அடுத்த ஜி- 20 உச்சி மாநாட்டில் புடின் கலந்துகொண்டால் கைது செய்யப்படமாட்டார்!  – பிரேசில் ஜனாதிபதி தெரிவிப்பு.

videodeepam

உக்ரைனின் முக்கிய நகரத்தை போராடி கைப்பற்றிய ரஷ்யா!  

videodeepam