deepamnews
இலங்கை

மாகாண சபை தேர்தலையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை போன்று சட்டசிக்கல் நீக்கப்பட்டு மாகாண சபை தேர்தலையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் அவற்றை தடுப்பதற்கு சட்டரீதியாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சென்றிருந்தார்.

வட்டாரங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Related posts

8,000 பேருக்கு அடுத்த வாரம் ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

videodeepam

போலி கடவுச்சீட்டில் நாட்டுக்குள் நுழைந்த சீன பிரஜை – இராஜாங்க அமைச்சர் தலையீட்டினால் விடுவிப்பு!

videodeepam

நாட்டை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam