deepamnews
இலங்கை

அமெரிக்க இராஜதந்திரி சின்டி ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திரி சின்டி மக்கெய்ன் நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய முகவரகத்துக்கான அமெரிக்காவின்  நிரந்த வதிவிட பிரதிநிதியான, சின்டி மக்கெய்ன் மக்கெய்ன் நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று இலங்கையை வந்தடைந்தார்.

அவரும் மற்றொரு உயர் அதிகாரியும், டோஹாவில் இருந்து மாலை 4.30 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் கொழும்பு வந்தனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர்களை கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதையடுத்து, சின்டி மக்கெய்ன் நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் மற்றும் அவசர மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செயற்படும் வழிகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமெரிக்க உணவு உதவித் திட்டங்களை முன்னிலைப்படுத்தவும், இலங்கையுடனான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் நீடித்த பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் தூதுவர் சின்டி மெக்கெய்ன் செப்டெம்பர் 28 வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளார்.

Related posts

4000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க திட்டம்.

videodeepam

QR அறிமுகத்தால் எரிபொருள் பாவனை குறைவு  – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தகவல்.

videodeepam

ரணில் விக்ரமசிங்க ஒரு திறமையான தலைவர் அல்ல – சரத் பொன்சேகா

videodeepam