கோவையில் நடந்த குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் உட்பட 6 வெவ்வேறு இடங்களில், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க, 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர், 500க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கருவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், இரு வழக்குகளில் துப்பு துலங்கியுள்ளது.
இரண்டு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மற்ற வழக்குகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும், காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.