deepamnews
சர்வதேசம்

உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் சரணடைந்தால் 10 ஆண்டு சிறை தண்டனை –  ஜனாதிபதி புடின் எச்சரிக்கை.

உக்ரைனில் போரிடும்,   ரஷ்ய வீரர்கள் சரணடைய கூடாது என்றும்,  மீறினால் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போரை நிறுத்தும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தநிலையில் உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவ வீரர்கள் எக்காரணம் கொண்டும் உக்ரைனிடம் சரணடைய கூடாது என ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.

சரணடையும் வீரர்களுக்கு 10 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திற்கும் அவர்  ஒப்புதல் அளித்துள்ளார்.

ரஷ்ய ராணுவத்தில் சேரும் வெளிநாட்டினருக்கு ரஷ்ய குடியுரிமையை வழங்குவதற்கான தனி சட்டத்திலும் அவர் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

புடினின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் உக்ரைனிடம் சரணடையும் ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டு பொதுமக்களை போலவே நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

இம்ரான் கானை 8 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு

videodeepam

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் நடைமுறை

videodeepam

புடினை கொல்ல உக்ரைன் அனுப்பிய இரகசிய ட்ரோன் விமானம்:  ஜேர்மன் தகவல்

videodeepam