deepamnews
சர்வதேசம்

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் – 57 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 52 பேர் பலியாகியுள்ளனர்.

மசூதி அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதி அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

Deepam

இதன்போது, மஸ்துங் மாவட்ட பொலிஸ் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்துள்ளார்.

மிலாதுன் நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். இந்த  நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகமாகியுள்ளன.

இந்த தாக்குதல் நடைபெற்று சில மணித்தியாலங்களில் குஹ்யபேர் பஃதுங்கவாபகுதியின் கங்கு  நகரில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.  

கடந்த 15 நாட்களில் மஸ்துங் மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

Related posts

1,000 பேரை பணயக் கைதிகளாக்கிய ஹமாஸின் முக்கிய தளபதி உயிரிழப்பு

videodeepam

வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை – ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவு

videodeepam

சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரம்

videodeepam