deepamnews
சர்வதேசம்

தீவிரமடையும் உக்ரைன் போர் – ரஷ்யாவிற்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில்,  உக்ரைன் இந்த வாரம் இரசாயன வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி இருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, இந்த போரில் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அது போன்ற தாக்குதல்களை நடத்தினால் அது ரஷ்யாவின் மிக கடுமையான தவறாக கருதப்படும் என்றும் அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுவாக பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் அதே போல ரேடியோ கதிர்வீச்சு பொருட்கள் அடங்கிய கருவியை கொண்டு உருவாக்கப்படும் ‘டர்ட்டி பாம்’ எனப்படும் அணுக்கழிவு வெடிகுண்டை உக்ரைன் பயன்படுத்த உள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிரடி தகவலை வெளியிட்டார்.

அதே நேரத்தில் அவர் அதற்கான ஆதாரம் எதையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் உக்ரைன், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றன.

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த போரில் கற்பனை செயக்கூடிய அழுக்கு எல்லாவற்றிற்கும் ஆதாரமாக ரஷ்யா திகழ்வதாக குற்றம் சாட்டினார்.

Related posts

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம் சிறையில் சரண் .

videodeepam

பெலாரஸ் வழக்கறிஞர், உக்ரைன், ரஷ்ய மனித உரிமை அமைப்புகளுக்கு  அமைதிக்கான நோபல் பரிசு

videodeepam

உக்ரைனில் குடியிருப்பு மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்- 11 பேர் பலி

videodeepam