deepamnews
சர்வதேசம்

பாரிய சர்ச்சைகளின் பின் பாகிஸ்தான் பிரதமர் தெரிவு!

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்தநிலையில், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி , பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தன.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பிரதமர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பிலாவல் பூட்டோ அறிவித்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் தனது சகோதரரும் பாக். முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீஃபை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

இதனால் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு பெற்று ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.

Related posts

சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளின் பின் முதல்முறையாகக் குறைந்துள்ளது

videodeepam

துபாயில் புர்ஜ் கலிபா அருகிலிருந்த 35 மாடி கட்டடம் தீக்கிரை

videodeepam

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை முற்றாக நிராகரித்துள்ளது அமெரிக்கா.

videodeepam