சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு மொரோக்கோவின் நகரில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு பங்கேற்றுள்ளது.
இதனிடையே, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவு தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்காக அவர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.