deepamnews
இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை  சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரிவின் உப தலைவர் ரெஹான் ஜயவிக்ரம உயர்நீதிமன்றத்தில் விசேட தீர்மான மனுவொன்றை நேற்று தாக்கல் செய்தார்.

 இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் 2/3 வது பங்கின் அனுமதியுடன் வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஆணை தேவை என்று அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் கோருகிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் பதியப்பட்டது.

முன்மொழியப்பட்ட சட்டமூலம்  முழுவதுமாக அரசியலமைப்பின் 12 (1) வது பிரிவை மீறுவதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்யுள்ளார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் அவசரகாலநிலை ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்றும், அத்தகைய அவசரநிலை அறிவிக்கப்படாமல், அரசியலமைப்பின் 4 மற்றும் பிரிவு 12 (1) ஆகியவற்றை மீறுவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டினார்.

இந்த சட்டமூலத்தில் பல விதிகள் நிறைவேற்று அதிகாரம், மக்களின் நீதித்துறை அதிகாரத்தை அரசியலமைப்பின் 4 வது பிரிவுக்கு முரணாக வழங்குவதாக மனுதாரர் கருதுகிறார்.  

Related posts

ஜக்கியதேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க அவர்கள் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம்.

videodeepam

ரணில் அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சியை கண்டித்து யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்

videodeepam

மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் சந்திப்பு

videodeepam