யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புலோலி தெற்கை சேர்ந்த இராசு புவனேஸ்வரன் (வயது- 37) என்பவரே உயிரிழந்தார்.
தனது வீட்டில் இருந்து இரவு வேலைக்காக இரவு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வேலைத்தளத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
அதன்போது, மந்திகை சந்திக்கு அண்மையில், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
அதில் படுகாயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை(09.01.2023) உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.