deepamnews
இலங்கை

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் அரிசியின் விலை

நாட்டில் அடுத்த மாதம் 1-ம் திகதி முதல் அறவிடப்படவுள்ள 2.5% சமூக பாதுகாப்பு வரியை விவசாய நடவடிக்கைகளில் இருந்து நீக்காவிட்டால் அன்றைய தினம் முதல் ஒரு கிலோ அரிசியின் விலையை 6.00 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், விவசாய நடவடிக்கைகளில் இருந்து உரிய வரியை நீக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை என அச் சங்கத்தின் தலைவர் முதித பெரேரா தெரிவித்தார்.

எனவே, அரிசிக்கான உத்தரவாத விலையை 6.00 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஒருவேளை, விலை உயர்த்தப்படாவிட்டால், ஒரு கிலோ அரிசியின் கொள்வனவு விலை 3.00 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Related posts

இலங்கைக்கு 75 புதிய நிபந்தனைகள் சர்வதேச நாணய நிதியம் வழங்கியது.

videodeepam

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவன் திடீர் மரணம்

videodeepam

சாதாரண தரப் பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!!

videodeepam