deepamnews
இலங்கை

சிற்றுண்டிச்சாலைகளில் அரிசி மா உணவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் குளிர்பானம் மற்றும் கோதுமை மா உணவுப் பொருட்களுக்கு தடை விதித்து, அரிசி மாவினால்  தயாரிக்கப்படும் உணவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான திட்டத்தை வகுப்பதற்கு சுகாதார, கல்வி மற்றும் விவசாய அமைச்சுகளின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு இணையாக, அரச அலுவலகங்களிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கருத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு பெரும்போக செய்கை பாதிக்கப்பட்டமையால், 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 400 மில்லியன் டொலர் செலவில் 08 இலட்சம் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

அனைத்து விவசாயிகளுக்கும் TSP உரத்தை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை

videodeepam

உயர் தர பரீட்சைக் காலத்தில் மின் வெட்டு – அதிகாரிகளிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

videodeepam

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் –  மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

videodeepam