deepamnews
இந்தியா

தண்ணீர் பாதுகாப்பு முயற்சியில் மக்களும் பங்கேற்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு

தண்ணீர் பாதுகாப்பு முயற்சியில் மக்களின் பங்களிப்பு அவசியம். அரசின் முயற்சி மட்டும் வெற்றி தேடித்தராது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் ஏற்பாட்டில், மாநில நீர்வளத்துறை மந்திரிகளின் முதலாவது தேசிய மாநாடு இடம்பெற்றது. அதில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையில்,

அரசியல் சட்டப்படி, தண்ணீர் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, நாட்டின் கூட்டு இலக்கை எட்டுவதற்கு மாநிலங்கள் பாடுபட வேண்டும்.

தண்ணீர் என்பது மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு பங்களிப்பு ஆகியவற்றுக்கு காரணமாக இருக்க வேண்டும்.

எந்த ஒரு பிரசார இயக்கத்திலும் மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால்தான், அந்த பணியின் தீவிரத்தன்மையை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அந்த இயக்கத்தின் உரிமையாளர் என்ற நினைப்பு, மக்கள் மனதில் உருவாகும். அத்திட்டம் வெற்றி பெறும். அதற்கு ‘தூய்மை இந்தியா’ திட்டமே சாட்சி. அதுபோல், தண்ணீர் பாதுகாப்பு முயற்சிகளில் மக்களும் பங்கெடுத்துக் கொள்வது அவசியம்.

மக்கள் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் அதிகபட்ச பங்களிப்பை அளிக்க வேண்டும். வெறும் அரசின் முயற்சிகள் மட்டுமே வெற்றிைய தேடித் தந்துவிடாது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

பத்துக்கும் மேற்பட்ட சிறப்புகளுடன் வசீகரிக்கும் நகரம் காசி என மோடி புகழாரம்..!

videodeepam

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்கிறார் எஸ்.ஜெய்சங்கர்

videodeepam

இந்திய ஊடகவியலாளர்களே இல்லாத நாடாக மாறுகிறது சீனா

videodeepam