deepamnews
சர்வதேசம்

சகோதரர் வில்லியம் தம்மை தாக்கியதாக இளவரசர் ஹரி குற்றச்சாட்டு

தமது சகோதரர் வில்லியம் தம்மை தாக்கியதாக இளவரசர் ஹரி குற்றம் சுமத்தியுள்ளதாக தெ கார்டியனை கோடிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சகோதரான வில்லியம்ஸ், தம்மை தாக்கியதாக இளவரசர் ஹரி, தமது நினைவுக் குறிப்பு புத்தகத்தில் எழுதியுள்ளதாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த குறிப்பின் பிரதியை தாம், இன்னும் பார்க்கவில்லை என்று பிபிசி தெரிவித்துள்ளது.

தமது சட்டையை பிடித்து வில்லியம்ஸ் தம்மை தாக்கியதாக ஹரி கார்டியனிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் கென்சிங்கன் அரண்மனை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அதேநேரம் மன்னர் சார்ல்ஸின் பங்கிங்காம் அரண்மனையும் இந்த செய்தி தொடர்பில் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர், தம்மை திருப்பி தாக்குமாறு வில்லியம், சகோதரர் ஹரியை கேட்டுக்கொண்டபோதும், ஹரி அதனை செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியின் மனைவியான மேஹன் தொடர்பிலான வாக்குவாதத்தின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்ரேலில் வரலாறு காணாத மக்கள் போராட்டம் – பிரதமரின் அதிரடி திட்டம்

videodeepam

சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார் –  மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

videodeepam

இந்திய வம்சாவளி ரிஷி சுனக் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார்

videodeepam