deepamnews
சர்வதேசம்

எரிமலை வெடிப்பை அடுத்து தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் உருவாகியது புதிய தீவு

அவுஸ்ரேலியாவுக்கு அப்பால் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது.

மத்திய டோங்கா தீவுகளில் அமைந்துள்ள இந்த எரிமலை, நீராவி மற்றும் சாம்பல் ஆகியவற்றைக் கக்கியது.

இந்த எரிமலை வெடித்த பதினொரு மணி நேரத்திற்குப் பின்னர், பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் இருந்து வெளிப்பட்டது என்று நாசா புவி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 14 ஆம் திகதி இந்த தீவின் பரப்பளவு 4,000 சதுர மீட்டராகவும், கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்திலும், காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

செப்டம்பர் 20ஆம் திகதிக்குள், இந்த தீவு 24 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக விரிவடைந்துள்ளது.

Related posts

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் இராணுவம்

videodeepam

ருவாண்டாவில் தொடரும் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 136 பேர் பலி

videodeepam

தாய்வானை இணைப்பதற்கு ராணுவத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்-  சீன ஜனாதிபதி

videodeepam