deepamnews
இந்தியா

விடுவிக்க கோரி நளினி, ரவிச்சந்திரன்  தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு,  மத்திய அரசுகளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி நளினி, ரவிச்சந்திரன்  ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ம் திகதி உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது.

இந்த நிலையில், வழக்கில் குற்றவாளியாக இருக்கும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில்,  ‘சிறையில் நன்னடத்தையுடன் இருக்கிறோம். வெளியே வந்தாலும் எங்களால் எந்தவித தீங்கும் ஏற்படாது.

அதனால், பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று இவ்வழக்கில் எங்களையும் விடுதலை செய்ய வேண்டும்’ என தனித்தனியாக கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் கவாய், நாகரத்தனா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related posts

மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழப்பு – முகாம்களில் 13,000 மக்கள் தங்கவைப்பு

videodeepam

அரச வீட்டில் இருந்து வெளியேறுமாறு ராகுல் காந்திக்கு அறிவித்தல்

videodeepam

சிற்றூந்தில் தொங்கியப்படி சென்ற இந்திய பிரதமர் மோடி- காவல்துறையில் முறைப்பாடு  

videodeepam