deepamnews
சர்வதேசம்

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஆயிரத்து 204 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.  அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 19 நிமிடங்களுக்கு பின்னர் 4.9 மெக்னிட்யூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பாரிய கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன என  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.  மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

அந்த நாட்டின் தலைநகர் ரபற் முதல் மரகேச் வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த 2004 ஆம் ஆண்டு மொராக்கோவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டு போராட்டம்

videodeepam

ரஷ்ய விமானத்தை உக்ரைனுக்கு வழங்கும் கனடா- கடும் கோபத்தில் புடின்

videodeepam

72 மணித்தியாலங்களில் வாக்னர் கூலிப்படையினர் கொல்லப்படலாம்!

videodeepam