deepamnews
சர்வதேசம்

ஆக்கிரமிப்பு போரில் 31,000க்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழப்பு – யுக்ரைன் அறிவிப்பு

யுக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் இதுவரை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்ததாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ம் திகதி போர் ஆரம்பமான தினத்தில் இருந்து இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக யுக்ரைன் பாதுகாப்பு சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் மாத்திரம் 700க்கும் அதிகமான ரஷ்ய படையினர் போரில் கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 3 ஆயிரத்து 220 தாங்கிகள், 6 ஆயிரத்து 405 கவச வாகனங்கள் மற்றும் 2 ஆயிரத்து 226 பீரங்கிகளையும் இந்த போரில் ரஷ்யா இழந்துள்ளதாக யுக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த தரவுகளை ரஷ்ய தரப்பினர் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கன்சர்வேடிவ் கட்சி படும் தோல்வியை சந்திக்கும் – பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபர் எச்சரிக்கை

videodeepam

அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

videodeepam

அமெரிக்காவின் நிவ்யோர்க் மாகாணத்தின் வெஸ்ட்செஸ்ட்டர் பகுதியில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

videodeepam